Remote Services
Remote Services

CAT® REMOTE SERVICES

PRODUCT LINK™ டெலிமேட்டிக்ஸ் மற்றும் CAT® உபகரணக் கட்டுப்பாட்டு தொகுதி (ECM) மென்பொருளுக்கான மென்பொருள் புதுப்பிப்புச் செயல்முறை

உங்கள் வணிகக் கூட்டாளர்களாக, Caterpillar மற்றும் உங்கள் Cat® டீலர் சிறந்த தொழில்நுட்பச் சலுகைகளையும் பிரீமியம் சேவையையும் உங்களுக்கு வழங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளனர்.  இந்த ஆவணமானது Product Link™ டெலிமேட்டிக்ஸ் மற்றும் Cat ECM மென்பொருளுக்கான தொலைநிலை மென்பொருள் புதுப்பிப்புகளை நிர்வகிப்பதற்கான எங்கள் நடைமுறைகளை விவரிக்கிறது. 

இவற்றை வழங்குவதன் மூலம் தொலைநிலை மென்பொருள் புதுப்பிப்புகள் Caterpillar வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்குகின்றன:

  • உபகரணத்தை நேரில் அணுகுவதற்கான பயணத்தின் தேவையைக் குறைத்தல்
  • வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் Cat டீலர்களிடமிருந்து தேவைப்படும் ஆதரவுச் சேவைகளுக்கான கட்டணத்தைக் குறைத்தல்
  • விரைவாகச் சிக்கல்களைச் சரிசெய்வதன் மூலம் இயங்கும் நேரத்தை அதிகரித்தல்
  • மிகவும் திறமையான ஆதரவு ஏற்பாடு, மென்பொருள் மற்றும் அசெட் செயற்திறன் மேம்பாடுகள் மற்றும் பலவற்றிற்குச் சிறந்த, நம்பகமான தரவை வழங்குதல்.

உங்கள் தயாரிப்பு, உள்ளமைவு மற்றும் சேவைத் தேர்வுகளைப் பொறுத்து, Cat ரிமோட் சேவையானது உங்கள் Cat உபகரணத்திற்குத் தொலைநிலையில் சேவையளிக்கும் பின்வரும் திறன்களின் தொகுப்பை வழங்க முடியும்:

இலக்கிட்ட ரிமோட் சேவை அறிக்கை

  • ரிமோட் ஃப்ளாஷ் மென்பொருள் புதுப்பிப்புகள்: தள வருகையின்றி உபகரண ECM & டெலிமேட்டிக்ஸ் சாதன மென்பொருள் புதுப்பிப்புகளை வழங்குகிறது.

  • தொலைநிலைச் சிக்கல்தீர்வு – படித்தல் (பகுப்பாய்வுகள்):  உபகரணத்திற்குத் தொலைநிலை இணைப்பை ஏற்படுத்தி, தொலைநிலையில் சில Caterpillar மின்னணு தொழில்நுட்பவியலாளர் (Cat ET) பணிகளைச் செய்யலாம். சிக்கல் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, உபகரணத் தரவை ஏறக்குறைய நிகழ்நேரத்தில் பார்க்கும் திறனை வழங்குகிறது மற்றும் பொருத்தமான தொழில்நுட்பவியலாளர், பாகங்கள் மற்றும் கருவிகளை அனுப்பத் தேவையான தகவல்களை வழங்குகிறது. இந்தச் செயல்பாட்டின் மூலம் ரிமோட் தயாரிப்பு நிலை அறிக்கையைப் (PSR) பெற முடியும்.

  • தொலைநிலைச் சிக்கல்தீர்வு – எழுதுதல் (மாற்றங்களை உள்ளமைத்தல்):   சோதனைகளைச் செய்யவும், ECMகள் மற்றும்/அல்லது டெலிமேட்டிக்ஸ் சாதனங்களில் அளவுருக்களை மாற்றவும், குறியீடுகளை அழிக்கவும் அல்லது ஆன்-சைட் வருகையை நீக்கக்கூடிய மென்பொருள் இயக்கப்பட்ட அம்சங்களை ஆன்/ஆஃப் செய்யவும் பயனரை அனுமதிக்கிறது.

டெலிமேட்டிக்ஸுக்கான பிற புதுப்பிப்பு வழிமுறைகள் – உங்கள் இணைப்பு உபகரணம் மூலம் அதிக பலன்களைப் பெறுவதற்காகத் தரவுத் தரத்தை மேம்படுத்த, காலாவதியான மென்பொருளைத் தடுக்க, புதிய அம்சங்களை இயக்க, வாடிக்கையாளர் கோரும் உள்ளமைவுகளைப் புஷ் செய்ய, Caterpillar ஆண்டு முழுவதும் சில கட்டுப்படுத்தாத ECM சாதனங்களைப் புதுப்பிக்கிறது.

மென்பொருள் புதுப்பிப்புகள் அல்லது தொலைநிலைச் சிக்கல்தீர்வு ஆதரவை நான் எவ்வாறு பெறுவது?

தொலைநிலைச் சேவையை நிர்வகிப்பதற்கான உங்கள் விருப்பங்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். 

ஓர் அடிப்படைக் கொள்கையாக, Caterpillar அதன் நல்லெண்ண முயற்சிகளைப் பயன்படுத்தி, முடிந்தவரை விரைவில் புதுப்பிப்பு அறிவிப்புகளை உங்களுக்கு வழங்குகிறது. மின்னஞ்சல், உங்கள் டீலர் அல்லது மொபைல் அல்லது இணையம் அடிப்படையிலான பயன்பாடு உட்பட புதுப்பிப்புக்குப் பொருத்தமான பல்வேறு வழிகளில் அறிவிப்பு வழங்கப்படலாம். இயற்கையாகவே, உங்களுக்கு அறிவிப்பை வழங்குவதற்கான எங்கள் திறன் உங்களின் நடப்புத் தொடர்புத் தகவல்களைப் பெறுவதைப் பொறுத்ததாகும்.

புதுப்பிப்புகளுக்கான தகவல்தொடர்புச் செயல்முறை பொதுவாகக் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, செய்யப்படும் மென்பொருள் நிறுவலின் வகையைச் சார்ந்தது:

கட்டுப்படுத்தாத (டெலிமேட்டிக்ஸ்) சிஸ்டம் புதுப்பிப்புகள்: Caterpillar/டீலர் அதன் நல்லெண்ண முயற்சிகளைப் பயன்படுத்தி, உங்களுக்கு மேம்பட்ட அறிவிப்பை வழங்குவதோடு, எந்தக் காரணத்திற்காகவும் நீங்கள் அதைப் பெற விரும்பவில்லை என்றால், அந்தப் புதுப்பிப்பை இயக்க வேண்டாம் என்று தெரிவு செய்வதற்கான விருப்பத்தையும் உங்களுக்கு வழங்கும். இத்தகைய வழக்கமான புதுப்பிப்புகளில் பிழைத் திருத்தங்கள் மற்றும் சிறிய புதுப்பிப்புகள், அம்ச மேம்பாடுகள் மற்றும் செயற்திறன் மேம்பாடுகள் ஆகியவை இருக்கும். அத்துடன் உங்கள் இணைப்பு உபகரணம் மூலம் அதிக பலன்களைப் பெறுவதற்காகத் தரவுத் தரத்தை மேம்படுத்த, காலாவதியான மென்பொருளைத் தடுக்க, புதிய அம்சங்களை இயக்க, வாடிக்கையாளர் கோரும் உள்ளமைவுகளைப் புஷ் செய்ய, Caterpillar ஆண்டு முழுவதும் சில கட்டுப்படுத்தாத ECM சாதனங்களையும் புதுப்பிக்கிறது. வாடிக்கையாளருக்குக் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும் அல்லது டெலிமேட்டிக்ஸ் மூலம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதை அறிமுகப்படுத்தும் மாற்றங்களுக்கு, Caterpillar/டீலர் வாடிக்கையாளர் ஒப்புதலை முன்கூட்டியே சேகரிக்கும். எந்திரம் அல்லது சிஸ்டத்தின் பாதுகாப்பு அல்லது பாதுகாப்பான செயல்பாட்டை மேம்படுத்த புதுப்பிப்பு நியாயமான முறையில் அவசியமாகக் கருதப்பட்டால், புதுப்பிப்பை நிறைவுசெய்த பிறகு நாங்கள் உங்களுக்கு அறிவிப்பை வழங்குவோம்.

கட்டுப்பாட்டுச் சிஸ்டம் புதுப்பிப்புகள்: மென்பொருள் புதுப்பிப்பின் தாக்கத்தில் ஒரு கட்டுப்பாட்டுச் சிஸ்டம் ECM இந்தால், நீங்கள் அல்லது உங்கள் சேவைத் தொழில்நுட்பவியலாளர் (அது ஒரு டீலர் தொழில்நுட்பவியலாளர் அல்லது Caterpillar ஆதரவுப் பணியாளராக இருக்கலாம்) முதலில் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் அல்லது இணையம் அடிப்படையிலான பயன்பாட்டைப் பயன்படுத்திப் புதுப்பித்தலைச் செயல்படுத்திய பின்னரே அல்லது புதுப்பித்தலுக்கு நீங்கள் ஒப்புதல் அளித்து, தயாரிப்பு பாதுகாப்பான நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்ட பிற வழிகள் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே புதுப்பிப்பு நிறுவப்படும். உபகரண ECM(கள்) உடன் இணைந்து டெலிமேட்டிக்ஸ் புதுப்பிக்கப்படலாம். ஒவ்வொரு டீலர்/Caterpillar ரிமோட் சேவைக்கும் முன்பாக வாடிக்கையாளரிடம் சரியான நேரத்தில் ஒப்புதல் சேகரிக்கப்படும். ஒரு முக்கியப் புதுப்பிப்பு என்பது பின்வரும் சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றை உள்ளடக்கியிருக்கலாம்:

  • புதிய மென்பொருள் அல்லது மென்பொருள் புதுப்பிப்பை ஒரு கட்டுப்பாட்டு ECM (எஞ்சின், பரிமாற்றம் போன்றவை)-இல் நிறுவுதல்

கட்டுப்படுத்தும் ECMகளின் தொலைநிலை மென்பொருள் நிறுவல் சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், டிஜிட்டல் அங்கீகாரப் படிவத்தில் ரிமோட் சேவையைத் தேர்ந்தெடுத்து, வரிசை எண் விலக்குப் பட்டியலை அமைக்க உங்கள் டீலருடன் இணைந்து பணியாற்றவும்.

சிக்கல்தீர்வு/பகுப்பாய்வுகள்: தளத்தில் உள்ள வாடிக்கையாளர் சிக்கல்களில் உதவுவதற்காகச் சிக்கல்தீர்வு அமர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. பகுப்பாய்வு மற்றும் உங்கள் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆதரவாக நாங்கள் தரவைச் சேகரித்துப் பதிவு செய்யலாம். ஒவ்வொரு டீலர்/Caterpillar ரிமோட் சேவைக்கும் முன்பாக வாடிக்கையாளரிடம் சரியான நேரத்தில் ஒப்புதல் சேகரிக்கப்படும். இதில் அடங்கும் எடுத்துக்காட்டுகள், ஆனால் இவை மட்டுமல்ல:

  • ஓர் அம்சம் அல்லது மென்பொருள் இயக்கப்பட்ட உபகரண இணைப்பை இயக்குதல்
  • கட்டுப்பாட்டு ECM-இன் உள்ளமைவு அளவுருவைத் தொலைநிலையில் மாற்றுதல்
  • தரவுப்பதிவி

Caterpillar இணைக்கப்பட்ட தயாரிப்பு தரவுக் கோட்பாடுகள் மற்றும் தரவு நிர்வாக அறிக்கை

Cat ரிமோட் சேவை உட்பட எங்களின் பல டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள், தயாரிப்பு இணைப்புநிலை மற்றும் இணைப்பின் காரணமாக இயக்கப்பட்ட தரவு மற்றும் இணையவழி அணுகலைச் சார்ந்துள்ளன. இணைக்கப்பட்ட தயாரிப்புத் தரவைச் சேகரித்து நிர்வகிப்பதற்கான எங்கள் நடைமுறைகளைப் பற்றிய கூடுதல் தகவல்கள் Caterpillar உலகளாவிய தரவுத் தனியுரிமை அறிக்கை, உங்கள் டிஜிட்டல் சேவை சந்தாக்களுக்குப் பொருந்தும் எந்தவொரு தனியுரிமை அறிவிப்புகள் மற்றும் Caterpillar தரவு நிர்வாக அறிக்கையில் கிடைக்கின்றன. ரிமோட் சேவை தொடர்பாக நாங்கள் என்ன தகவல்களைச் சேகரிக்கிறோம், அதை எப்படிச் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பிற நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிய, இந்த ஆவணங்களை அணுகவும்.

Cat Financial

Cat Financial நிறுவனத்துடன் உங்களுக்கு ஒப்பந்தம் இருந்தால், இந்தச் செயல்முறை ஆவணத்தின் தலைப்புடன் தொடர்புடைய மற்றும் உங்கள் தேர்வுகளைப் பாதிக்கக்கூடிய பொறுப்புகள் உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்க, அதனுடன் கலந்தாலோசிக்கவும்.

அகச் சேவைகள்

வாடிக்கையாளர் அல்லது டீலர் தொழில்நுட்பவியலாளர் Caterpillar இடமிருந்து புதுப்பிப்பைக் கோரும்போது அல்லது உபகரணத்தின் வழக்கமான பராமரிப்பு மற்றும் சேவையில் Cat ET போன்ற உள்ளூர்ச் சேவைக் கருவிகளைப் பயன்படுத்தும் நிகழ்வுகளுக்கு இந்தக் கொள்கை பொருந்தாது.

நான் எப்படி மேலும் கற்றுக்கொள்வது?

ரிமோட் சேவை, அதன் பலன்கள், அது எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்கள் Product Link டெலிமேட்டிக்ஸ் மற்றும் Cat ECM மென்பொருளுக்கு ஏதேனும் புதுப்பிப்புகள் உள்ளதா என்பது உட்பட அதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் CatDigitalSupport@cat.com என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் Cat டீலரிடம் பேசவும்.